For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டிமான்ட்டி காலனி 2 படத்தின் #DeletedScenes வெளியானது!

09:48 PM Aug 24, 2024 IST | Web Editor
டிமான்ட்டி காலனி 2 படத்தின்  deletedscenes வெளியானது
Advertisement

டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. ஒருசில கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான காட்சிகள், திகில் விஎஃப்எக்ஸ் என ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் இப்படம் பெற்றுள்ளது. மூன்றாம் பாகத்திற்கான குறிப்போடு முடிவதால், அடுத்த பாகம் உருவாகும் எனத் தெரிகிறது.

படக்குழுவினர் இந்த வெற்றியை சமீபத்தில் கேக் வெட்டிகொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டியதால் இப்படம் வெளியான 2-ஆவது வாரத்தில் கூடுதல் திரைகளில் திரையிடப்பட்டது. முதல் வாரத்தில் 275 திரைகளில் வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படம் தற்போது 350க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்படுகின்றன.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இதன் மூன்றாம் பாகம், நான்காம் பாகம்கூட எடுக்கலாம் என படக்குழுவினர் கூறியுள்ளனர். தற்பொழுது திரைப்படம் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது. வாழை மற்றும் கொட்டுக்காளி திரைப்படம் இந்த வாரம் வெளியானாலும் தமிழ் நாடு முழுக்க டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் இன்னும் பல ஸ்கிரீன்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Tags :
Advertisement