நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு!
பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பொதுமக்கள் அனைவரும் வாக்காளர் பட்டியல் விபரங்களை இலகுவாக தெரிந்து கொள்ளும் வகையில் ஏன் இணையத்தில் வெளியிடக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர் மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் யார்? இறந்தவர்கள், புலம் பெயர்ந்த வாக்காளர்கள் என்ற காரணத்தை குறிப்பிட்டு பட்டியலை வெளியிட வேண்டும். நீக்கப்பட்டதற்கான காரணத்தை இணையதளத்திலேயே தெரிந்து கொள்ளும் வகையில் தெரிவிக்க வேண்டும். அது குறித்த பொது விளம்பரங்களை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது தேர்தல் ஆணைய வழக்கக்கறிஞர், வாக்காளர் அடையாள எண் அடிப்படையில் மட்டுமே பெயர்களை தேடி தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிட முடியும் என்று தெரிவித்தார். இதற்கு மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.