Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மனமுடைந்த விராட் கோலி; அன்புடன் அரவணைத்த அனுஷ்கா!

08:52 AM Nov 20, 2023 IST | Web Editor
Advertisement

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த விராட் கோலிக்கு ஆறுதல் கூற முயலும் அனுஷ்கா சர்மாவின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. குறிப்பாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 10 வெற்றிகளை பெற்றது. இந்திய அணியின் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்ததால் இம்முறை கோப்பை உறுதி என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் இருந்தனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ரோஹித் 47 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ராகுல் 66 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை குவித்தது இந்திய அணி.

241 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.  ஆஸ்திரேலிய அணி வீரர்கள் டிராவிஸ் ஹெட் 134 ரன்களும், லபுஸ்ஷேன் 58 ரன்களும் எடுத்ததால் 43 ஓவரிலேயே எளிதாக வென்றனர்.

இந்நிலையில் தோல்வியால் மனமுடைந்த விராட் கோலியை அணைத்தபடி ஆறுதல் கூற முயலும் அனுஷ்கா சர்மாவின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  மேலும் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா,  முகமது சிராஜ் உள்ளிட்டோர் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எனினும், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. 11 போட்டிகளில் விளையாடிய அவர் 3 சதங்கள் விளாசி மொத்தம் 765 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சிறப்பாக விளையாடிய அவருக்கு தொடர் நாயகனுக்கான விருது வழங்கப்பட்டது.

Tags :
#viratkohliAnushkaSharmaAustraliaCricketWorldCup2023CWC23FinalICCCricketWorldCupICCWorldCup2023IndiaINDvsAUSINDvsAUSfinalNews7Tamilnews7TamilUpdatesWorldcupfinal2023
Advertisement
Next Article