பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து - எஸ்.வி.சேகர் சரணடைய ஜூலை மாதம் வரை அவகாசம்!
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் ஒருமுறை செய்த தவறுக்காக தனக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தான் மன்னிப்பு கோரிய பின்பும் அதனை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
நீதிபதிகள்:
ஆனால் நீங்கள் மன்னிப்பு கூறவில்லை என்பதை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதே? மேலும் பெண்களின் கண்ணியத்தை தரைக் குறைவாக பேசிய நிலையில் நீங்கள் மன்னிப்பும் கூறவில்லை என்று கருத்தையே உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. நீங்கள் பல பெண் பத்திரிகையாளர்களை இவ்வாறு தரை குறைவாக பேசியிருப்பதாக தானே இந்த வழக்கில் புகார்தார்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
எஸ்.வி.சேகர்:
இந்த விவகாரத்தில் தான் ஒரு மெசேஜை பார்வேர்ட் மட்டும் தான் செய்தேன், பின்னர் அதை உடனடியாக நீக்கவும் செய்து விட்டேன். புகார் அளித்த பெண் பத்திரிகையாளரும் அந்த புகாரை திரும்ப பெற்றுவிட்டார். ஆனால் ஒரு பத்திரிகையாளர் அமைப்பு தொடர்ந்த வழக்கில் தான் தற்போது இந்த தண்டனை என்பது விதிக்கப்பட்டிருக்கிறது.
என்னுடைய வாழ்நாளில் நான் பொய் கூறியது இல்லை, எனவே இந்த விவகாரத்தை பொருத்தவரை நான் ஏற்கனவே மன்னிப்பு கோரிய நிலையில் இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும், 30 நாட்கள் சிறை தண்டனை என்பதை ரத்து செய்ய வேண்டும். அதேபோல் 15,000 ரூபாய் அபராதத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
எஸ்.வி.சேகர் தரப்பு:
இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் தான் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளிடம் நேரடியாக மன்னிப்பு கூறுகிறேன் மீண்டும் மன்னிப்பு கூறுகிறேன் எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
நீதிபதிகள் உத்தரவு:
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் எஸ்.வி சேகர் நேரடியாக சம்பந்தப்பட்ட பின் பத்திரிகையாளரை அணுகி அவரிடம் மன்னிப்பு கூறுவதற்கும், தனது தரப்பு விஷயத்தை விளக்குவதற்கும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார் எனவே அதனை ஏற்கிறோம். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் சரணடையவதற்கான காலத்தை ஜூலை மாதம் வரை நீட்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.