Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு - டிச.11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

11:44 AM Nov 19, 2024 IST | Web Editor
Advertisement

டெண்டர் விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு விசாரணையை, டிச.11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை துறையில் கடந்த 2016-21 ஆட்சிகாலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் முன்னாள் முதலமைச்சரும், அந்த துறையின் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.

அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தமது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, தன்னைப் பற்றிய அவதூறு பேச்சுக்கு தடை கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் அறப்போர் இயக்கம் மீது எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், சாட்சியம் அளிப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை டிச.11க்கு ஒத்திவைத்தது.

Tags :
Arappor Iyakkamedappadi palaniswamiEPSmadras highcourt
Advertisement
Next Article