Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி!

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி  மீதான அவதூறு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
01:38 PM Sep 08, 2025 IST | Web Editor
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி  மீதான அவதூறு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Advertisement

கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக  தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி  மீது அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கரம் வெங்கடேஷ்வரலூ அவதூறு வழக்கு தொடுத்திருந்தார் இந்த  வழக்கை விசாரித்த தெலங்கானா உயர்நீதிமன்றம் ரேவநிதி ரெட்டிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது

Advertisement

இந்த உத்தரவிற்கு எதிராக கரம் வெங்கடேஸ்வரலூ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கரம் வெங்கடேஸ்வரலூ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெலுங்கானா உயர்நீதிமன்றமானது இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என கூறினார்.

ஆனால், அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மனு தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் ”அரசியல் போட்டிக்கான தளமாக பயன்படுத்தக் கூடாது என்று பலமுறை தெரிவித்தும் தொடர்ச்சியாக இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.மேலும் ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டுமானால் எதையும் தாங்கும் தன்மை வேண்டும்” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார் தொடர்ந்து, நீதிபதி இம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags :
latestNewsRevanthReddysupremcourt
Advertisement
Next Article