For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நடிகர் மனோஜ் குமார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது" - பிரதமர் மோடி இரங்கல்!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ் குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
09:55 AM Apr 04, 2025 IST | Web Editor
 நடிகர் மனோஜ் குமார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது    பிரதமர் மோடி இரங்கல்
Advertisement

பாலிவுட் திரைத்துறையில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் மனோஜ் குமார் (87) . இவர் இயக்குநர், தயாரிப்பாளர் , எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர். தேசபற்றுமிக்க படங்களில் அதிகமாக நடித்ததால் ‘பாரத் குமார்’ என்றும் இவர் அழைக்கப்பட்டார். இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இவரின் ‘புரப் அவுர் பஸ்சிம்’ படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

Advertisement

இவர், யாத்கார், பெஹ்சான், மேரா நாம் ஜோக்கர் உள்ளிட்ட சிறந்த படங்களை கொடுத்துள்ளார். இவர் கடந்த 1992-ல் பத்மஸ்ரீ விருதையும், 2015-ல் இந்திய சினிமா துறையில் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றார். இதற்கிடையே, இவர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி உடல்நல குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4.03 மணியளவில் மனோஜ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் மனோஜ் குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"புகழ்பெற்ற நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமாரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் இந்திய சினிமாவின் ஒரு சின்னமாக  இருந்தார். குறிப்பாக அவரது தேசபக்தி ஆர்வத்திற்காக நினைவுகூரப்பட்டார், அது அவரது படங்களிலும் பிரதிபலித்தது. மனோஜின் படைப்புகள் தேசிய பெருமையின் உணர்வைத் தூண்டின, மேலும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி"

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement