For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SRK வீட்டருகே குடியேறும் தீபிகா, ரன்வீர் தம்பதி: #Housewarming எப்போது தெரியுமா?

01:27 PM Aug 29, 2024 IST | Web Editor
 srk வீட்டருகே குடியேறும் தீபிகா  ரன்வீர் தம்பதி   housewarming எப்போது தெரியுமா
Advertisement

நடிகர் ஷாருக்கானின் புதிய வீட்டின் அருகே குடியேறும் தீபிகா, ரன்வீர் தம்பதியின் புதிய வீடு குடியேறும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பாலிவுட்டில் முன்னணியில் இருப்பவர்கள் ரன்வீர் சிங்,  தீபிகா படுகோனே தம்பதி.  6 ஆண்டுகளாக டேட்டிங் செய்த இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  இருவரும் இணைந்து, பாஜ்ராவ் மஸ்தானி, பத்மாவத், 83 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தினர்.  இருவருக்கும் விவாகரத்து என்றும் சில வதந்திகளும் பரவின.  ஆனால், அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கடந்த நவம்பர் மாதம் இவர்கள் தங்களது 5-வது திருமண நாளை கொண்டாடினர்.

கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் அறிவிப்பை தீபிகா வெளியிட்டார். மேலும் செப்டம்பர் மாதம் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளதாகவும் இந்த ஜோடி தெரிவித்தனர். சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் தீபிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள் :ஸ்விக்கி டெலிவரி பாய் To பேஷன் மாடல்! #Mumbai-ஐ சேர்ந்தவரின் வெற்றி பயணம்!

ஒரு உடற்பயிற்சி ஆர்வலராக இருக்கும் தீபிகா படுகோன் அண்மையில் யோகா செய்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்நிலையில், அடுத்த மாதம் ரன்வீர் சிங்,  தீபிகா படுகோனே தம்பதிக்கு குழந்தை பிறக்க உள்ள நிலையில், அதற்கு முன்தாக புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஷாருக்கானின்  புதிய இல்லமான மன்னத்திற்கு அருகில், கடல் நோக்கி இவர்களின் வீடு அமைந்துள்ளது. இது 11,266 சதுர அடி உட்புற இடத்தில் அமைந்துள்ளது. இதன் மதிப்பு 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த தம்பதி 2021 ஆம் ஆண்டில் அலிபாக்கில் 22 கோடி மதிப்புள்ள பங்களாவையும் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர்களின் புதிய மாளிகையானது முடிவடையும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விரைவில் வீடு குடியேறும் நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement