#Deepavali | தமிழகத்தில் 21 பேருக்கு தீக்காயம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாளான இன்று மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 21 பேருக்கு தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,
"சென்னையை பொறுத்தவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 7, தஞ்சாவூரில் 6, மதுரையில் 5 மற்றும் திருச்சியில் 3 பேர் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து ஏற்கெனவே வீடு திரும்பியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை" இவ்வாறு அவர் தெரிவித்தார்.