Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Deep Fake வீடியோ - 1 லட்சம் டாலர் இழப்பீடு கேட்ட இத்தாலி பிரதமர்!

02:54 PM Mar 21, 2024 IST | Web Editor
Advertisement

இத்தாலிய பிரதமர் மெலோனி தனது புகைப்படத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் ஆபாச வீடியோவிற்கு நஷ்ட ஈடாக 1  லட்சம் டாலர் இழப்பீடு  கோரியுள்ளார். 

Advertisement

இத்தாலிய பிரதமராக இருப்பவர் ஜியோர்ஜியா மெலோனி.  கடந்த 2022 ஆம் ஆண்டு இவரது புகைப்படம் வேறு உடலுடன் சித்தரிக்கப்பட்டு போலி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோ அமெரிக்காவின் ஆபாச இணையதளம் ஒன்றில் பதிவேற்றப்பட்டு பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.  இதனையடுத்து இதுதொடர்பாக மெலோனின் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வீடியோவை உருவாக்கியவர்களை போலீசார் கண்டுபிடித்தனர்.  40 வயதான நபரும், 73 வயதான தந்தையும் தான் இந்த செயலை செய்துள்ளனர் என கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த வழக்கில் மெலோனி தரப்பு வழக்கறிஞர்,  $108,500 நஷ்ட ஈடு கோரியுள்ளார்.  மேலும் இந்த நஷ்ட ஈடு மிகவும் சிறிய தொகைதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாகவே AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல போலி வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  அண்மையில் கூட நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.  Deep Fake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் முகத்தை வைத்து போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

இதன் தொடர்ச்சியாக,  போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு,  அது தொடர்பான அறிவுறுத்தல்களையும் வெளியிட்டது.

Tags :
CompensationDeepfake VideosGiorgia MeloniItaly PM
Advertisement
Next Article