ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் கல்லூரியை மதுரைக்கு மாற்ற முடிவு!
ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் கல்லூரியை மாற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பயின்று வரும் மதுரை எய்ம்ஸ்
மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு போதிய இட வசதியும், மருத்துவ
பயிற்சியும் கிடைக்காத சூழல் உள்ளது. இந்த காரணத்தால், மருத்துவக்கல்லூரி மாணவர்களில் 100 பேரை மதுரையில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திருமங்கலம் அரசு மருத்துவமனையில், அந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் மருத்துவமனையில் இருந்து 10 கிமீ சுற்றளவுக்குள் 100 மாணவர்களுக்கான வகுப்புகள், ஆய்வகம், விடுதி உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய கட்டிடத்தை வாடகைக்கு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஜனவரி 18-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
இதையும் படியுங்கள்: ஆப்கானிஸ்தானுடனான முதல் டி20 போட்டி – இந்தியா அபார வெற்றி.!
இப்போதைக்கு ஓராண்டு காலத்திற்கு வாடகைக்கு கேட்பதாகவும், தேவைப்பட்டால்
2 ஆண்டுகளுக்கு அதை நீட்டிப்பு செய்வதாகவும் தெரிவித்துள்ளது. எய்ம்ஸ்
மருத்துவ கட்டுமானம் விரைவில் துவங்கும் என எதிர்பார்த்திருந்த சூழலில் இந்த
அறிவிப்பு வெளியாகியுள்ளது.