டெல்லியில் மதராசி குடியிருப்பை அகற்ற முடிவு: குழந்தைகளின் கல்வி, வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்... போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை!
டெல்லி ஜங்க்புரா பகுதியில் மேம்பாலம் புனரமைப்பு , கால்வாய் தூர்வாரும் பணி, மெட்ரோ பணிகளுக்காக "மதராசி குடியிருப்பு" பகுதியை அகற்ற மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில் , இங்கு வாழும் சுமார் 500 குடும்பங்களை மாற்று இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மாற்று இடம் 40 கிலோ மீட்டருக்கு தொலைவில் உள்ளதால் பள்ளி குழந்தைகளின் கல்வி பாதிக்கும் , பணிக்கு செய்பவர்கள் தங்கள் வேலையை இழக்க கூடும். இதன் மூலம் வாழ்வாதார முற்றிலும் பாதிக்கும் என்பதால் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி காந்தி சமாதி பகுதியிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி “மதராசி குடியிருப்பு” தமிழ் மக்கள் பேரணியாக செல்ல முயன்ற நிலையில், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.