டிசம்பர் 26... சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினம்!
சுனாமிப் பேரழிவின் 19-ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் இன்று (டிச. 26) அனுசரிக்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு டிச.26-ல் இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளின் கடலோரப்பகுதிகளில் சுனாமிப் பேரலைகள் உருவாகி தாக்கியதில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மரணமடைந்தனர்.
இதையும் படியுங்கள் : சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்! நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு!
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடற்கரையோர கிராமங்களில் சுனாமி ஏற்பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த கோர நிகழ்வின் நினைவு தினத்தன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னங்களில் சுனாமியால் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்தும் கடலில் மலர்களைத் தூவியும் அவர்களது உறவினர்கள் வருடந்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.26) 19 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு, சுனாமியால் இறந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.