Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி ஐஐடியில் தொடரும் மரணங்கள்... தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட 21 வயது மாணவர் !

03:29 PM Oct 23, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி ஐஐடியில் 21 வயதான மாணவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

டெல்லி ஐஐடியில் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரைச் சேர்ந்த குமார் யாஷ் என்ற மாணவர், மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனிடையே நேற்று ஐஐடி மருத்துவமனைக்கும் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் குமார் அறை எண் டி57-ல் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனே போலீசார் ஒருவர் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அறை உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐஐடி ஊழியர்களும், அவரது நண்பர்களுடன் அறையின் உள்ளே செல்ல, ஜன்னலை உடைத்துள்ளனர். உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு துண்டுகளை பயன்படுத்தி அவர் தூக்கிட்டுள்ளது தெரியவந்தது. பின்னர் துண்டுகளை வெட்டி அவரது உடலை வெளியே கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து ஐஐடி ஆம்புலன்ஸில் குமாரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது அறையில் சோதனை நடத்தியதில் தற்கொலை கடிதங்கள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Next Article