Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"என்னால் மூச்சு விட முடியவில்லை" - கெஞ்சியபடி மரணித்த ஃபிராங்க் டைசன்: மீண்டும் ஒரு ஜார்ஜ் ஃபிலாய்ட்!

04:11 PM Apr 27, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவில்,  விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது, அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

Advertisement

அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டது போல் அமெரிக்காவில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.  அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் கடந்த 18 ஆம் தேதி கார் ஒன்று மின்கம்பத்தின் மீது மோதியது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இந்த விபத்து தொடர்பாக அருகில் இருந்தவர்களிடம் விசாரனையை மேற்கொண்டனர்.  அப்போது விபத்தை ஏற்படுத்தியவர் அருகில் உள்ள உணவகத்திற்கு ஓடிவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த உணவகத்திற்கு சென்று,  விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான,ஃபிராங்க் டைசன் (53) என்பவரை பிடிக்க முயன்றனர்.  அப்போது காவல்துறையினருக்கும் ஃபிராங்க் டைசனுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் : “பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது” – செல்வப்பெருந்தகை அறிக்கை!

தப்பி ஓட முயன்ற ஃபிராங்க் டைசனை கீழே தள்ளி அவரது கைகளை பின்புறமாக வைத்து விலங்கு பூட்ட முயன்றனர்.  அப்போது, ஃபிராங்க் டைசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தனக்கு மூச்சுத் திணறுவதாகவும்,  தன்னால் சுவாசிக்க இயலவில்லை என்றும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.  ஆனால், காவல்துறையினர் அதனை காதில் வாங்காமல் அவரை கைது செய்ய முயற்சி செய்தனர்.

 

இந்நிலையில், சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சி திணறல் ஏற்பட்டது.  பின்னர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஃபிராங் டைசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து,   ஃபிராங்க் டைசன்,  காவல்துறையினரிடம் மூச்சுவிட முடியவில்லை என கூறியும்,  விடாமல் அவர் அழுத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படியுங்கள் : விடைத்தாளில் ‘ஜெய்ஸ்ரீராம்’…மதிப்பெண்களை வாரி வழங்கிய 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்!

முன்னதாக,  கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம்,  ஜார்ஜ் பிளாய்ட் என்பவர், காவல்துறையினரால் கழுத்தில் மிதித்து கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மினியாபோலிஸ் காவல் துறையினரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் வீடியோ இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது.  தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது மிகப் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
#killingafrican americam mandeathechoes George Floydfrank tysonOhio manPoliceUSA
Advertisement
Next Article