அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு: இந்த ஆண்டில் 4-வது சம்பவம்!
அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் ஒஹியோவில் இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரி என்பவர் சின்சினாட்டியில் உள்ள கல்லூரியில் வணிகவியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில், ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உடற்கூராய்வு பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வு முடிந்த பின் இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரி எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : விசாகப்பட்டினத்தில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டி!
இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியுட்டுள் செய்தியில் கூறியிருப்பதாவது:- "ஓஹியோவில் உள்ள இந்திய வம்சாவளி மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரியின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இந்த கட்டத்தில், தவறான செயல்கள் குறித்து சந்தேகம் இல்லை. தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. குடும்பம் மற்றும் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது." இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இந்த ஆண்டில் இது 4-வது சம்பவம். இதற்கு முன்னதாக மூன்று இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் பர்டூ பல்கலைகலைக்கழத்தில் படித்து வந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர் மரணம் அடைந்தார். ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நிலையில் திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
ஜனவரி 16-ந்தேதி ஜார்ஜியாவில் உள்ள லிதோனியாவில் அரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி மரணம் அடைந்தார். இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் படித்த வந்த அகுல் தவான் இந்த மாதத்தின் தொடக்கத்தில் மரணம் அடைந்தார். அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சிடைய செய்கிறது.