For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெற்றி துரைசாமியின் மறைவு... ‘விடாமுயற்சி’ அப்டேட்டை தள்ளிப்போட்ட அஜித்!

01:30 PM Feb 14, 2024 IST | Web Editor
வெற்றி துரைசாமியின் மறைவு    ‘விடாமுயற்சி’ அப்டேட்டை தள்ளிப்போட்ட அஜித்
Advertisement

நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது நண்பர் வெற்றி துரைசாமியின் மறைவினால் திரைப்படத்தின் அப்டேட்டை அஜித் தள்ளிப்போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி தனது உதவியாளர் கோபிநாத்துடன் இமாச்சலப்பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடந்த 4-ந் தேதி அவர் சென்ற கார் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் விழுந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தஞ்ஜின் இறந்தார். மேலும், கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து காணாமல் போன வெற்றியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அவரது உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்காக சிம்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து வெற்றியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் நேற்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. 

அவரது உடல் சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஜித்தும், வெற்றி துரைசாமியும் நண்பர்கள் எனக் கூறப்படும் நிலையில், அவரது மறைவு அஜித்திற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, தாம்பரத்தை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கத்தில் உள்ள வெற்றியின் பண்ணை வீட்டிற்கு சென்ற அஜித்குமார், சைதை துரைசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நண்பரின் இந்த எதிர்பாராத மறைவால் அஜித் தாங்கமுடியாத சோகத்தில் இருக்கிறார். இது போன்ற சமயத்தில் தன்னுடைய படங்கள் குறித்தான அப்டேட்களை வெளியிடுவது சரியாக இருக்காது என்பது அஜித்தின் முடிவு என்கிறார்கள். இதனால், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் இன்று வெளிவருதாக இருந்தது.  ஆனால், வெற்றி துரைசாமி இறப்பால் இந்த அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement