For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

’கேப்டன்’ விஜயகாந்த் மறைவு – பிரபலங்கள் நேரில் அஞ்சலி...

09:43 PM Dec 28, 2023 IST | Web Editor
’கேப்டன்’ விஜயகாந்த் மறைவு – பிரபலங்கள் நேரில் அஞ்சலி
Advertisement

ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அபூர்வ கலைஞன் விஜயகாந்த் என நடிகர் சூர்யா காணொலி வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளர்.

Advertisement

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். படப்பிடிப்பு காரணமாக வெளியூர்களில் இருக்கும் நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.நடிகர் விஷால், சூர்யா சிவகுமார் ஆகியோர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபலங்கள் நேரில் அஞ்சலி:

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், டி. ராஜேந்தர், இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர். முருகதாஸ், உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் , எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தர்ராஜன் என சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையின் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு காலையிலேயே சென்னைக்கு புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இன்று இரவு அல்லது நாளை காலை விஜயகாந்த் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் எஸ்.ஏ. சந்திரசேகர், விஷால், சிம்பு உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

Advertisement