For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எத்தியோப்பியாவில் திடீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு!

04:34 PM Jul 23, 2024 IST | Web Editor
எத்தியோப்பியாவில் திடீர் நிலச்சரிவு  பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு
Advertisement

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

கடந்த 21-ம் தேதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர்.நேற்று நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக இருந்தது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி 157 ஆக உயர்ந்துள்ளது.

அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோபா மண்டல தகவல் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் கூறியுள்ளார்.நேற்று காலை முதல் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேற்றில் சிக்கிய 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவினால் பலர் தங்கள் சொந்தங்களை இழந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : பட்ஜெட் எதிரொலி – சட்டென சரிந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

எத்தியோப்பியாவின் மழைக் காலத்தின்போது நிலச்சரிவுகள் பொதுவானவை. இந்த நிலச்சரிவு ஜூலையில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும். இந்நிலையில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள், நிவாரணக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement