மின் கட்டணம் செலுத்த அவகாசம் | தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் நேற்று முன் தினம் இரவு மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டியுள்ளது.
இதையும் படியுங்கள் : திருவண்ணாமலை நிலச்சரிவு | 7 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு!`
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
" ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்த வருகிற 10-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.