’டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பார்வை வெளியீடு!
தமிழ் திரையுலகை தனது காமெடியால் கலக்கி வந்த நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சந்தானத்துடன் நடிகர்கள் கெளதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.
இந்த நிலையில், இன்று நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளையொட்டி படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படம் மே மாதம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
Happy birthday darling @iamsanthanam 🤗🤗😘
So happy to present ur next from the blockbuster Franchise #DDNextLevel 🔥Unveiling the First Look of @iamsanthanam in #DDNextLevel Devil's Double
A film by @iampremanand
Produced by @TSPoffl @NiharikaEntReleasing this May!… pic.twitter.com/CuN3ByP8dC
— Arya (@arya_offl) January 21, 2025