For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#DCvsRR - டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு தேர்வு!

08:07 PM May 07, 2024 IST | Web Editor
 dcvsrr   டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு தேர்வு
Advertisement

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

Advertisement

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில்  நடைபெற்று வருகிறது. இதுவரை 55 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் 56வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு  முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் டெல்லி வெற்றிப் பெற்றால் லக்னோவை பின்தள்ளி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு செல்லும்.

Tags :
Advertisement