Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#DCvsKKR | டெல்லி அணிக்கு 273 ரன்கள் இலக்கு!

09:51 PM Apr 03, 2024 IST | Web Editor
Advertisement

 கொல்கத்தா நைட்ரைடஸ் அணி,  டெல்லி அணிக்கு 273 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

17வது ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டது.  இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக பில் சால்ட் , சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர்.  தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர் .  தொடக்க விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் பில் சால்ட் 18 ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து ரகுவன்ஷி களமிறங்கினார். நரைன் , ரகுவன்ஷி இருவரும் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர் . குறிப்பாக நரைன் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

நரைன் 21 பந்துகளிலும் , ரகுவன்ஷி 25 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். அரைசதம் கடந்த பிறகு நரைன் வாணவேடிக்கை காட்டினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய நரைன் 39 பந்துகளில் 89 ரன்களுக்கு (7 பவுண்டரி , 7 சிக்சர் )வெளியேறினார். பின்னர் ரகுவன்ஷி 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து வந்த ரசல் , ரிங்கு சிங் இருவரும் அதிரடியை தொடர்ந்தனர். . ரசல் 41 ரன்களும் , ரிங்கு சிங் 26 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 272ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் நோர்ஜே , இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 273 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் டெல்லி அணி விளையாடுகிறது.

Tags :
dcDC vs KKRdelhi capitalsIndian Premier LeagueIPLkkrkkr vs dcKolkata Knight Riders
Advertisement
Next Article