DCvsGT | அசத்திய பட்லர் - 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி!
2025 ஐபிஎல் தொடரில் இன்று சுப்பன் கில் தலைமையிலான குஜராத் அணி அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லியை அணியை எதிர்கொண்டது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்த போடியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 39 ரன்களும், அசுதோஷ் சர்மா 37 ரன்களும், கருண் நாயர் 31 ரன்களும் அடித்தனர். இதன் மூலம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்த டெல்லி அணி 203 ரன்கள் அடித்தது. குஜராத் அணியில் பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய குஜராத் அணியில் சாய் சுதர்ஷன், சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார். இதில் கில் 7 ரன்களில் ரன் அவுட்டாகினார். இதையடுத்து சாய் சுதர்ஷன் 36 ரன்களில் குல்தீப் யாதவிடம் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர், 54 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்சர்களை விளாசி 97* ரன்கள் அடித்து அசத்தினார். இவருடன் சேர்ந்து ரூதர்ஃபோர்ட் 44 ரன்கள் அடித்தார். இதன் மூலம் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.