For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருவண்ணாமலை தீபத் திருவிழா இரண்டாம் நாள்; வெள்ளி விமானங்களில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகள்!!

11:04 AM Nov 19, 2023 IST | Web Editor
திருவண்ணாமலை தீபத் திருவிழா இரண்டாம் நாள்  வெள்ளி விமானங்களில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகள்
Advertisement

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில், பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

Advertisement

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கார்த்திகை  தீபத்திருவிழா கடந்த 17.ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் (அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர்) 11 நாட்கள் தீப திருவிழாவில் காலை மற்றும் மாலை  பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பர்.

இதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
மேலும் வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அண்ணாமலையார் கருவறை
அருகில் அதிகாலை 4 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி
தீபம் ஏற்றப்படும். அதனைத்தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2668அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.

இதனை காண தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருந்து 40 லட்சத்திற்கு மேல்
பக்தர்கள் வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில்  தேவையான அடிப்படை வசதிகள்  செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement