For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தாத்தா ஓடிடியில் வராரு... - இந்தியன் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்ஃபிளிக்ஸ்!

05:56 PM Aug 04, 2024 IST | Web Editor
தாத்தா ஓடிடியில் வராரு      இந்தியன் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்ஃபிளிக்ஸ்
Advertisement

'இந்தியன் 2' திரைப்படம் வரும் 9-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சமுத்திரகனி,  பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், விவேக், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் நேற்று வெளியானது.

கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள இந்த இந்தியன் 2 திரைப்படம், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு வெளியானாலும் ரசிகர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு இன்னும் குறைக்கவில்லை.லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளையும் சந்தித்தது.

இதனிடையே, இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து இப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாம்.

இதனிடையே 'இந்தியன் 2' திரைப்படம் வரும் 9-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் ஓடிடியில் வெளியாகிறது.

Tags :
Advertisement