For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரபலமான டூத் பேஸ்ட்டுகளில் ஆபத்தான கன உலோகம் - ஆய்வக சோதனையில் அதிர்ச்சி!

பிரபலமான டூத் பேஸ்ட்டுகளில் ஆபத்தான கன உலோகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வக சோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.
07:05 PM Apr 18, 2025 IST | Web Editor
பிரபலமான டூத் பேஸ்ட்டுகளில் ஆபத்தான கன உலோகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வக சோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.
பிரபலமான டூத் பேஸ்ட்டுகளில் ஆபத்தான கன உலோகம்    ஆய்வக சோதனையில் அதிர்ச்சி
Advertisement

பிரபலமான டூத் பேஸ்ட்டுகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் ஆபத்தான கன உலோகம் இருப்பதாக ஆங்கில நாளிதழான தி கார்டியன் அதிர்ச்சிகரமான செய்தி வெளியிட்டுள்ளது.  டூத் பேஸ்ட்டுகள் மற்றும் பல் பொடிகளில் கன உலோகங்கள் உள்ளதா? என்பதை மூன்றாம் தரப்பு ஆய்வுகள் மூலம் கண்டறிந்து தரும் நிறுவனம் லீட் சேஃப் மாமா.

Advertisement

அந்த நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு  ஆய்வக சோதனையில்  51 வகை பிரபல டூத் பேஸ்டுட்டுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அதில் 90% ஈயமும், 65% அதிக நச்சுத்தன்மை கொண்ட ஆர்சனிக் கன உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட டூத் பேஸ்ட்டுகளில் குழந்தைகள் உபயோகிக்கும் பேஸ்ட்டுகளும் அடங்கும். அவற்றில் கிட்டத்தட்ட 47% பாதரசம் இருப்பதும்  35% காட்மியம் இருப்பதும்  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து லீட் சேஃப் மாமா நிறுவனர் தமரா ரூபின்,  “இது மனசாட்சிக்கு விரோதமானது - குறிப்பாக 2025 இல். மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதை யாரும் கவலையாக நினைக்கவில்லை. ஆராய்ச்சியில் காணப்படும் கன உலோகங்களின் அளவுகள் வரம்புமீறலாக உள்ளது.

ஈயம் போன்ற கன உலோகங்கள் இருப்பது பாதுகாப்பானது இல்லை என அரசாங்கம் கண்டறிந்துள்ளது.  சிறிய அளவிலான ஈயம் கூட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று மேயோ கிளினிக் தெரிவித்துள்ளது. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மன மற்றும் உடல் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் ஈய நச்சுத்தன்மையால் பாதிக்கப்படுவதாக மாயோ கிளினிக் தெரிவித்துள்ளது. எனவே மிக அதிக அளவில் ஈய விஷம் ஆபத்தானது” என்று கூறியுள்ளார்.

அந்த நிறுவனத்தின் மூன்றாம் தரப்பு சோதனையின் மூலம், க்ரெஸ்ட், சென்சோடைன், டாம்ஸ் ஆஃப் மைனே, டாக்டர் ப்ரோனர்ஸ், டேவிட்ஸ், டாக்டர் ஜென், கோல்கேட், டாக்டர் பிரைட்  உள்ளிட்ட ஏராளமான டூத் பேஸ்ட் பிராண்டுகளில் கன உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Tags :
Advertisement