தலித்துகள் முதலமைச்சராக வர முடியாது என பேசியது ஏன்? விசிக தலைவர் #Tirumavalavan பேட்டி!
தலித்துகள் முதலமைச்சராக வர முடியாது என வேட்கையாலோ, இயலாமையிலோ கூறவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
குடியரசு மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ஈரோட்டில் தந்தை பெரியார்
திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிட கழக
பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்
விடுதலைச்சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்
ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் 1925 முதல் 1949 வரை குடியரசு இதழின் வரலாற்று தொகுப்பு என்ற நூலினை விடுதலை
சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்
இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியதாவது :
"தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுவதும் பெரியாரின் அரசியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எளியவர்களை அரசியல் படுத்த வேண்டும்,அதிகாரப்படுத்த வேண்டும் என்ற பார்வை கொண்டவர் பெரியார். மூடப்பழக்கத்தில் மூழ்கியுள்ள ஏழை, எளிய மக்களை மீட்க வேண்டும், விடுதலை பெற வேண்டும் என நினைத்தவர் பெரியார்.
பாஜகவால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் காலுன்ற முடிந்தாலும் , தமிழ்நாட்டில்
ஒர் அக்கவுண்ட்டை கூட ஓப்பன் பண்ண முடியவில்லை.
தலித்துகள் முதலமைச்சராக முடியாது என்று சொல்லியது எனக்குள்ள வேட்கையால்,
இயலமையால் சொல்லவில்லை. தற்போதைய சூழ்நிலையை தான் சொன்னேன் , அதற்கான காலம் கனியவில்லை என்று தான் சொன்னேன். ஆனால் அதற்கு என் மீது எதிர்மறை விமர்சனம் வந்துள்ளது.
மக்கள் சுயமரியாதையோடு, பகுத்தறிவுவோடு வாழவும் எவை தடையாக உள்ளது என்பதை சுட்டிக் காட்டினார். அப்போது கடவுள் நம்பிக்கை தான் என்பதை உணர்ந்தும் அதற்கு தடையான பார்ப்பனர் சமுதாயம் என்பதை தகர்க்க வேண்டும் என்பதை கடவுள் இல்லவே இல்லை என்று சொன்னார். கடவுளுக்கு பெரியாருக்கு என்ன பிரச்னை கடவுள் பெயரால் பெரும்பாலான உழைக்கும் மக்களை சுரண்டுவதை உணர்ந்த எதிர்த்தார் பெரியார்.
இதையும் படியுங்கள் ; “கடந்த 5 ஆண்டுகளில் 18,179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன” – #AdoptionResourceCommission தகவல்!
நிலம் இல்லை, ஏன் வருமானம் இல்லை, வறுமையில் ஏன் இருக்கிறோம் ஏன் நல்ல உடை உடுத்த முடியவில்லை என்று முற்பிறவியில் செய்த பாவம் என்று சொன்னதை எதிர்த்தார் பெரியார். பெரியார் தான் திராவிட சொல்லை பயன்படுத்தினார். அதனால் தமிழர் என்ற சொல் எழுச்சி பெறவில்லை என்று சிலர் பொய் பிரச்சாரம் செய்கிறார். பெரியார் எளிய மக்களின் விடுதலைக்காக காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து வெளியே வந்தனர். அம்பேத்கர் போல் பெரியாருக்கு சமுதாய தாழ்வு அவமானம், பொருளாதார பின்னடைவு இல்லை. ஆனாலும் எளிய மக்களுக்காக அனைத்தும் துறந்து போராடினார்.
இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என பெரியார் வலியுறுத்தினார். இடஒதுக்கீடு சமூக நீதி அடிப்படையில் வழங்க வேண்டும் என்றார். தமிழன் என்று ஊக்கத்தை தருவது திராவிடம் தான். கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் கூட 94வயது வரை வாழ்ந்தார். கடவுள் என்று சொல்பவர்கள் 40வயதில் போய் விடுகிறார்கள். இதற்கு கடவுளோடு தொடர்புபடுத்தி பார்க்க கூடாது. உன்னால் முடியும் என்ற நம்பிக்கை விதித்தவர் பெரியார்.
மேலும் தமிழ்நாட்டிலுள்ள பிறமாநில உயர் அதிகாரிகளின் பெயரிலுள்ள சாதி பட்டத்தை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.