For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ooty தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் டெய்சி மலர்கள்!

10:50 AM Sep 10, 2024 IST | Web Editor
 ooty தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் டெய்சி மலர்கள்
Advertisement

உதகை அரசு தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனுக்காக நடப்பட்ட பலவண்ண மலர்கள், கண்ணை கவரும் வகையில் பூத்துக் குலுங்கி வருகின்றன.

Advertisement

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே
மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். அதேபோல் செப்டம்பர், அக்டோபர்
மாதங்களில் குளிர்கால சீசன் நிலவும். இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து, இங்குள்ள சுற்றுலா தலங்களை ரசித்து செல்வர்.

குறிப்பாக உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவை கண்டு செல்வர். இந்நிலையில் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக பலவண்ண மலர்கள் நடவு செய்யப்பட்டு, அவை தற்போது பூக்கத் துவங்கியுள்ளன. அதிலும் ஆஸ்டெரேசி குடும்பத்தை சேர்ந்த டெய்சி மலர்கள் தற்போது
பூத்து குலுங்குகின்றன.

இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் டெய்சி மலர்கள் பூத்துள்ளதை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்து செல்கின்றனர். மலர்களின் அழகை புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Tags :
Advertisement