#UPI பரிவர்த்தனை: நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதி! என்னென்ன தெரியுமா?
யுபிஐ செயலிகளுக்கான தினசரி பணப்பரிவர்த்தனை உச்சவரம்பு, 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு நாளும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தும் நிலையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் சுலபமாகவும் எளிதாகவும் இருப்பதால் அதனை பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு யுபிஐ பண பரிவர்த்தனைகள் மதிப்பு அதிகரித்துள்ளதாக சமீபத்தில் அறிக்கை வெளியானது. இதன் காரணமாக யுபிஐ செயலியை மேம்படுத்துவதற்காக பல்வேறு விதமான புதிய அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : நானியின் ‘#SuriyavinSanikizhamai’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு!!
அந்த வகையில் யுபிஐ செயலியில் 5 லட்சம் வரையில் பணம் அனுப்பும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய அப்டேட் இன்று முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டும்தான் யுபிஐ மூலமாக 5 லட்சம் வரை பணத்தினை அனுப்ப முடியும். அதன்படி மருத்துவமனை செலவுகள் மற்றும் கல்வி உள்ளிட்ட செலவுகளுக்கு யுபிஐ மூலமாக 5 லட்சம் வரையில் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். மேலும் இதற்கு முன்னதாக யுபிஐ உச்சவரம்பு ஒரு லட்ச ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.