For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிவகாசியில் காலண்டர் விற்பனை அமோகம் - ரூ.400 கோடியை எட்டியது!

10:49 AM Jan 02, 2025 IST | Web Editor
சிவகாசியில் காலண்டர் விற்பனை அமோகம்    ரூ 400 கோடியை எட்டியது
Advertisement

சிவகாசியில் '2025'ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர்கள் விற்பனை சுமார் 400 கோடி ரூபாயை கடந்துள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு விதமான காலண்டர்கள் அச்சிடப்பட்டு வருகின்றன தினசரி காலண்டர்கள் தயாரிப்பு பணிகள் பிரதானமாக இருந்து வருகிறது. தினசரி காலண்டர் தயாரிப்பில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் இதனை சார்ந்து நூற்றுக்கணக்கான அச்சகங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஒரு வருடத்தில் 6 மாதங்கள் காலண்டர் அச்சிடும் பணிகளும் மற்ற இதர பணிகளும் நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வெளியானவுடன் அடுத்தாண்டிற்கான காலண்டர் தயாரிப்பு பணிகள் தொடங்கப்படும். மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி வரை காலண்டர் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது முழுமையாக தயார் செய்யப்பட்ட காலண்டர்கள் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு
அனுப்பும் பணிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது.

சிவகாசியில் தயாராகும் காலண்டர்கள் மிகவும் தரமானதாகவும் புதுமைகள் நிறைந்திருப்பதாலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சிவகாசியில் தயாராகும் காலண்டர்களுக்கு நிறைய ஆர்டர்கள் கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு காலண்டர் தயாரிப்பு பணிகள் துவங்கியதிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இது வரை சுமார் 90 சதவிகித ஆர்டர்களுக்கான காலண்டர்கள் தயாரித்து முடித்து சம்பந்தப்பட்ட
நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள
ஆர்டர்களும் வரும் தைப் பொங்கல் திருநாளுக்குள் முடித்து கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தாண்டு காலண்டர்கள் விற்பனை சுமார் 400 கோடி ரூபாயை
கடந்துள்ளது என காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் . கடந்தாண்டை விட இந்தாண்டு காலண்டர்கள் விற்பனை சற்று அதிகமாகவே இருந்தது என காலண்டர் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Tags :
Advertisement