Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு!

06:55 AM Oct 01, 2024 IST | Web Editor
Advertisement

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 48 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

நாட்டில் வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு என்று 2 வகையான சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் 14.2 கிலோவுடனும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 19 கிலோவுடனும் விறபனை செய்யப்பட்டு வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசலை போன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றனர். அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.1817- ஆக விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் ரூ.38 உயர்ந்து செப்டம்பர் மாதம் ரூ.1855 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மேலும் 48 ரூபாய் உயர்ந்து அக்டோபர் மாதத்திற்கான சிலிண்டர் விலை ரூ.1903- ஆக விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், கடந்த சில மாதத்திற்கு முன்பு வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.100 குறைக்கப்பட்ட நிலையில், இம்மாதம் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Commercial cylindercylinderGas cylinderlpg cylinderLPG priceNews7TamilRate
Advertisement
Next Article