Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.500-க்கு சிலிண்டர், 200 யூனிட் இலவச மின்சாரம் | வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெலங்கானா முதலமைச்சர்...

09:11 PM Feb 28, 2024 IST | Web Editor
Advertisement

இன்று முதல்  200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூபாய் 500 க்கான கேஸ் திட்டத்தை தெலுங்கானா அரசு  செயல்படுத்தியுள்ளது.

Advertisement

தெலங்கானாவில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வராக ரேவந்த்ரெட்டி பதவி ஏற்றார். தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம், ரூ.500க்கு சமையல் கேஸ் திட்டங்கள் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிவு செய்தது. அதன்படி நேற்று தெலங்கானா தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூ.500க்கு சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ரேவந்த்ரெட்டி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி மின்வாரிய ஊழியர்கள் 200 யூனிட்டுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு `ஜீரோ’ பில் உருவாக்க உள்ளனர். இதன்மூலம் கிரஹஜோதி என்ற இந்த திட்டத்தின் மூலம் தெலங்கானாவில் 83 லட்சம் குடும்பங்கள் பயனடைய உள்ளனர்.

இதேபோல் மாநிலம் முழுவதும் 90 லட்சம் பேர் ரேஷன் கார்டுகள் வைத்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் ரூ.500 விலைக்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதந்தோறும் கேஸ் விநியோகஸ்தர்களுக்கு அரசு மானியத்தொகை வழங்க உள்ளது.

Tags :
500 Gas CylinderCM Revanth ReddyCongress GuaranteesGas cylinderTelangana government
Advertisement
Next Article