Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை - 9 மாவட்டகளை சேர்ந்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

10:05 PM Nov 29, 2024 IST | Web Editor
Advertisement

பெஞ்சல் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டில் இரவு 10 மணி நிலவரப்படி 9 மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:

வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சென்னை, புறநகர் பகுதிகளிலும் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இரவு 10 மணி நிலவரப்படி 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ. 29) விடுமுறை அறிவிக்கப்பட்டது

விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்:

சென்னை – பள்ளி, கல்லூரிகள்.
திருவள்ளூர் – பள்ளி, கல்லூரிகள்.
காஞ்சிபுரம் – பள்ளி, கல்லூரிகள்.
செங்கல்பட்டு – பள்ளி, கல்லூரிகள்.
மயிலாடுதுறை – பள்ளி, கல்லூரிகள்.
கடலூர் – பள்ளி, கல்லூரிகள்.
விழுப்புரம்- பள்ளி, கல்லூரிகள்.
கள்ளக்குறிச்சி- பள்ளி, கல்லூரிகள்.
ராணிப்பேட்டை - பள்ளி, கல்லூரிகள்.

Tags :
College studentCyclone AlertFengal Cycloneleavenews7 tamilschool holidaysWeather
Advertisement
Next Article