For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை

04:55 PM Dec 01, 2023 IST | Web Editor
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை   தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை
Advertisement

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். 

Advertisement

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள  ‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 4ம் தேதி சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவித்த நிலையில், டிச. 5 -ம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் புயலுக்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில்  காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்றது.

தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கடலோர மாவட்டங்களைச் சார்ந்த 14 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

மேலும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்,  தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டிஜிபி,  நகராட்சி நிர்வாக துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர்,  சென்னை மாநகராட்சி ஆணையர்,  வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Tags :
Advertisement