விலகிச் சென்றது மிக்ஜாம் புயல் - சென்னைக்கு 210 கிமீ தூரத்தில் விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
07:25 AM Dec 05, 2023 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
             ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே இன்று மிக்ஜாம் புயல் கரையை  கடக்கிறது. இதனால் நாளை அதிகாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது இந்நிலையில், சென்னையில் இருந்து 210கிமீ வடதிசை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்வதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு 20 கி மீ வடக்கு -வட கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது இன்று காலை ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மச்சிலிபட்டணத்திற்கும் இடையே, பாபட்லாவிற்கு அருகே, கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
        
    
    
    
         
        
    
    
    
        
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        சென்னைக்கு 210 கிமீ தூரத்தில் மிக்ஜாம் புயல் விலகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
                 Advertisement 
                
 
            
        மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை, விமான சேவை அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
 Next Article