Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல்!

03:46 PM Nov 30, 2024 IST | Web Editor
Advertisement

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை புதுச்சேரி - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

வங்​கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்​சல்’ புயலாக வலுப்​பெற்றுள்​ளது. இது தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரண​மாக, சென்னை உள்ளிட்ட 7 மாவட்​டங்​களில் அதிக​னமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் காலை முதல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது;

ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு தென்கிழக்கில் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை புதுச்சேரி - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக கனமழையும், திருவாரூர், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இன்று காலை 8.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 97 மில்லி மீட்டர், மகாபலிபுரத்தில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பருவ மழை டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும்” என்று தெரிவித்தார்.

Tags :
CycloneFengalRainrain alert
Advertisement
Next Article