Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்கக் கடலில் உருவானது ஃபெஞ்சல் புயல்!

04:23 PM Nov 29, 2024 IST | Web Editor
Advertisement

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஃபெஞ்சல் புயல் உருவானது.

Advertisement

வங்கக்கடலில் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த பெங்கல் என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே நிலை கொண்டிருந்தது. இது புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் மாறாது என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை, அடுத்த சில மணி நேரங்களில் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்தது.

https://twitter.com/Indiametdept/status/1862438848242098603

இந்நிலையில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது நாளை (நவ.30) பிற்பகல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 60 முதல் 70 கி.மீ., வரையிலும், அதிகபட்சமாக 90 கி.மீ.,வரையிலும் காற்று வீசக்கூடும். கடல் சீற்றமாக காணப்படும் எனவும் கூறியுள்ளது.

Tags :
bay of bengalCycloneFengalIMD
Advertisement
Next Article