Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Cyclone Alert : இரு நாட்களில் புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

03:20 PM Nov 24, 2024 IST | Web Editor
Advertisement

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இரு நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ள நிலையில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களில் புயலாக மாறி தமிழ்நாடு - இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
CycloneHeavy rainIMDrain alert
Advertisement
Next Article