For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வினாத்தாள் கசிவை தடுக்க சைபர் பாதுகாப்பு" - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

12:57 PM Aug 02, 2024 IST | Web Editor
 வினாத்தாள் கசிவை தடுக்க சைபர் பாதுகாப்பு    உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Advertisement

வினாத்தாள் கசிவை தடுக்க சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.

இதற்கிடையே நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த ஜூலை - 23ம் தேதி விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள் நீட் தேர்வினை ரத்து செய்ய முடியாது என்று அறிவித்ததோடு நீட் தேர்வு முறை கேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு முடிவுகளை ஏன் ரத்து செய்யவில்லை என்பதற்கான விளக்க உத்தரவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று (ஆகஸ்ட் - 02ம்  தேதி ) வாசிக்கப்பட்டது. அதில் நீதிபதிகள் கூறியதாவது :

“வினாத்தாள்களைத் தயாரிப்பது முதல் அதைச் சரிபார்ப்பது வரை கடுமையான சோதனைகளை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். வினாத்தாள்களைக் கையாளுதல் மற்றும் சேமித்தல் போன்றவற்றைச் சரிபார்க்க தற்போது உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். வினாத்தாள் கசிவு போன்றவற்றைத் தடுக்கும் வகையில் சைபர் பாதுகாப்பு முறைகளில் நவீனத் தொழில்நுட்பத்துடனான கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள் : திருப்பதி கோயில் உண்டியலில் தொடர்ந்து கைவரிசை காட்டிய ஊழியர்: ரூ.150 கோடிக்கு சொத்து சேர்த்தது அம்பலம்!

வினாத்தாள் கசிவுகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் மின்னணு கைரேகைகள், இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு பாட்னா மற்றும் ஹசாரிபாத்தில் உள்ள தேர்வு மையங்களில் மட்டுமே நடந்துள்ளது. இதனால் மொத்த தேர்வையும் ரத்து செய்வது சரியல்ல. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. அதே சமயம் தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை நிபுணர் குழு அமைத்துச் சரி செய்ய வேண்டும்"

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement