For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாளை வெளியாகிறது ‘சியான் 62’ பட அப்டேட்!

11:51 AM Apr 16, 2024 IST | Web Editor
நாளை வெளியாகிறது ‘சியான் 62’ பட அப்டேட்
Advertisement

விக்ரம் நடிக்கும் சியான் 62 படத்தின் அப்டேட் நாளை வெளியாகவுள்ளது.  

Advertisement

தமிழ் பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விக்ரம் திகழ்ந்து வருகிறார் .  'சேது' படம் மூலம் புகழ் பெற்ற அவர் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.  இதில் 'தில்',  தூள்,  சாமி,  அந்நியன் படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்வை பெற்றன.  இவர் தற்போது இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சீயான் 62 என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  இந்தப் படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் துசாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர்.  இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதன்படி சீயான் 62 படம் குறித்த முக்கிய அறிவிப்பு விக்ரமின் பிறந்தநாளான நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement