“மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொலை செய்வதை விட மோசமானது” - உச்ச நீதிமன்றம்!
தாஜ் மகாலை சுற்றிய பாதுகாக்கப்பட்ட தாஜ் ட்ரேபீசியம் மண்டலத்தில் 454 மரங்களை வெட்டிய சிவசங்கர் அகர்வால் என்பவரின் மனு, நீதிபதிகள் அபய் எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மதுரா-பிருந்தாவனில் உள்ள டால்மியா பண்ணைகளில் 454 மரங்களை சிவசங்கர் அகர்வால் வெட்டியதற்காக, மரத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரைத்த சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு ஆணையத்தின் (CEC) அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள்,
“சுற்றுச்சூழல் விஷயத்தில் கருணை காட்டக்கூடாது. அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது ஒரு மனிதனைக் கொல்வதை விட மோசமானது. அனுமதியின்றி வெட்டப்பட்ட 454 மரங்களால் உருவாக்கப்பட்ட பசுமைப் போர்வையை மீண்டும் உருவாக்க குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் ஆகும்” என தெரிவித்து CEC பரிந்துரையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.