உத்திரபிரதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு... வைரலாகும் செய்தி தொகுப்பு வீடியோ - உண்மை என்ன?
This News Fact Checked by ‘PTI'
ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து செய்தி தொகுப்பாளர் விவரிக்கும் வீடியோ கிளிப் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பகிர்ந்த பயனர்கள் மார்ச் 4, 2025 முதல் உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறினர்
இது குறித்து PTI உண்மை சரிபார்ப்பு குழு மேற்கண்ட ஆய்வில், பகிரப்பட்டு வரும் வைரல் காணொளி 2021 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்பதையும் அப்போது உத்தரபிரதேசத்தில் கோவிட்-19 காரணமாக ஒரு வாரத்திற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்பதையும் கண்டறிந்து. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ தவறான கூற்றுடன் பரப்ப்படுவதாக கண்டறிந்துள்ளது.
உரிமைகோரல்:
ஒரு யூடியூப் பயனர் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 4, 2025 முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று செய்தி தொகுப்பாளர் விவரிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் “மார்ச் 4 முதல் ஊரடங்கு தொடங்கும், இந்த வீடியோவை முடிந்தவரை பகிருங்கள், இதனால் மக்கள் தேவையான அனைத்து பொருட்களையும் சரியான நேரத்தில் வாங்க முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த வீடியோவில் செய்தி தொகுப்பாளர், “நீங்கள் உத்தரபிரதேசத்தில் வசிக்கிறீர்கள் என்றால், எது திறந்திருக்கும், எது திறக்கப்படாது என்று நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்...” என்று விவரித்து வருகிறார்.
அந்த வீடியோவின் link மற்றும் archive link- ஐ கிளிக் செய்து காணலாம் .
வீடியோவின் ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ளது.
PTI -யின் ஆய்வு:
தி டெஸ்க், இன்விட் கருவி மூலம் வைரலான வீடியோவை இயக்கி, பல கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தது. கூகிள் லென்ஸ் மூலம் கீஃப்ரேம்களில் ஒன்றை இயக்கியபோது, அதே கூற்றுகளுடன் பல பயனர்கள் அந்த வீடியோவைப் பகிர்ந்ததை PTI சரிபார்ப்பு குழு கண்டறிந்தது. இது தொடர்பான பதிவுகளின் Link மற்றும் Archive Link.
முதலில் PTI-யின் சரிபார்ப்பு குழு, வைரல் பதிவில் கூறப்பட்ட கூற்றுக்களை உறுதிப்படுத்தும் பொருத்தமான தகவல்களைக் கண்டறிய, வீடியோவில் சொல்லப்பட்ட முக்கிய வார்த்தைகளை பற்றி தேடியது. இருப்பினும் உத்தரபிரதேசத்தில் வரவிருக்கும் எந்தவொரு ஊரடங்கு பற்றிய நம்பகமான அறிக்கைகளைளோ, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோ கிடைக்கவில்லை.
இது குறித்து காட்சி ஊடங்களில் தனது தேடுதலை தொடங்கிய PTI-யின் சரிபார்ப்பு குழு, கூகுள் லென்ஸ் மூலம் கீஃப்ரேம்களை இயக்கி, ஏப்ரல் 17, 2021 அன்று ரிபப்ளிக் பாரத் காட்சி ஊடகத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட கிளிப்பின் நீட்டிக்கப்பட்ட பதிப்பைக் கண்டறிந்தது.
அந்த வீடியோ கிளிப்பின் தலைப்பு “உ.பி. 'பூட்டப்பட்டுள்ளது'! சையத் சுஹைலுடன் 'யே பாரத் கி பாத் ஹை' நிகழ்ச்சியைப் பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கிளிப்பின் 1:54 வினாடி நேரத்தில் சமூக வலைத்தளங்களில் பரவும் வைரல் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள அதே விவரங்களை தொகுப்பாளர் கூறுவதைக் கேட்கலாம்.
அந்த வீடியோவின் link மற்றும் ஸ்கிரீன்ஷாட்:
வைரலாகும் வீடியோவுக்கும் சம்பந்தப்பட்ட காட்சி ஊடகத்திற்கும் இடையிலான ஒற்றுமைகளை எடுத்துக்காட்டும் படம் கீழே உள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவில் உள்ள செய்தி சம்பந்தப்பட்ட காட்சி ஊடகத்தில் இருப்பதுபோல் மற்ற ஊடகங்களில் இருக்கிறதா என்பதை கண்டறிய, வைரலான வீடியோவில் இருந்து சில குறிப்புகளை கொண்டு PTI-யின் சரிபார்ப்பு குழு ஆய்வு நடத்தியது. அதில் முன்னணி ஆங்கில ஊடகமான NDTV-யில் ஏப்ரல் 29, 2021 அன்று இதுபோன்ற செய்தி வெளியிடப்பட்டது கண்டறியப்பட்டது. அதன் தலைப்பு, “உ.பி. வார இறுதி ஊரடங்கு திங்கள் கிழமைகளை உள்ளடக்கி, இப்போது வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் செவ்வாய் காலை 7 மணி வரை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் “COVID-19 பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேச அரசு இன்று வார இறுதி ஊரடங்கின் கால அளவை 24 மணிநேரம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது, இப்போது அது திங்கட்கிழமைகளையும் உள்ளடக்கும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த செய்தியின் Link மற்றும் ஸ்கிரீன்ஷாட்:
அதே போல் ஏப்ரல் 20, 2021 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றொரு செய்தியை வெளியிட்டது, அதன் தலைப்பு: “உ.பி.: 2,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ள மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது; இரவு ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அந்த செய்தியில் "புதிய உத்தரவின்படி, 500 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள கோவிட் பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் இரவு ஊரடங்கு உத்தரவின் கீழ் தொடரும், இது ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை அமலில் இருக்கும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது. அந்த செய்தியின் Link.
இந்த ஆய்வுகளை மேற்கொண்டு பின்னர், இந்த வைரல் காணொளி 2021 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் கோவிட்-19 காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டபோது தொடங்கப்பட்டது என்று PTI-யின் சரிபார்ப்பு குழு முடிவு செய்தது.
முடிவுரை
உத்தரபிரதேசத்தில் மார்ச் 4, 2025 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறும் செய்தி அறிக்கையின் காணொளி கிளிப்பை பல சமூக வலைத்தளப் பயனர்கள் பகிர்ந்துள்ளனர். இது குறித்த PTI-யின் உண்மை சரிபார்ப்பு குழு ஆய்வில், வைரலான காணொளி 2021 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்பதைக் கண்டறிந்தது, அப்போது உத்தரபிரதேசத்தில் கோவிட்-19 காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
This story was originally published by 'PTI' and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.