Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

5 திருமணம், 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய ஆசாமி - திருமண நாடகம் நடத்தி ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஒடிசா போலீஸ்!

04:57 PM Aug 04, 2024 IST | Web Editor
Advertisement

ஒடிசாவில் 5 திருமணம் மற்றும் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ஆசாமியை திருமணம் செய்துகொள்வதாக நாடகமாடி ஸ்கெட்ச் போட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

Advertisement

ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூரை சேர்ந்தவர் 34 வயதான சத்யஜித் மனகோபிந்த் சமல். 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக  இவரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக மேட்ரிமோனி தளங்கள் மற்றும் செயலிகள் மூலம் பெண்களை தொடர்புகொண்டு அவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார்.

குறிப்பாக விவாகரத்து பெற்ற பெண்களை இவர் குறிவைத்துள்ளார். இவரால் ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்களின் புகாரின் பேரில் இவரின் இந்த தில்லாலங்கடி வேலை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. தான் ஒரு போலீஸ் அதிகாரி அல்லது உளவுத்துறை அதிகாரி எனக்கூறி மேட்ரிமோனி தளங்களில் வரன்களை அவர் தேடியுள்ளார். பின்னர் அவர்களிடம் பேசிப்பழகி பணம், கார், பைக் போன்றவற்றை பெற்று ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து அறிந்த போலீசார் மேட்ரிமோனி தளங்களில் அவரது விவரங்களை சேகரித்துள்ளனர். அதன்படி, குறைந்தது 49 பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஒடிசாவில் எஃப்ஐஆர் பதிவு செய்த இரண்டு பெண்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும் இரண்டு பெண்களுடன் திருமண ஒப்பந்தத்தில் இருந்துள்ளார். இவர்களிடம் இருந்து பெரும் பணத்தை வைத்து கார் வாங்குவது, டாக்ஸிகளை குத்தகைக்கு விடுவது என போன்ற பணிகளை செய்து வந்துள்ளார். மேலும் அடிக்கடி துபாய்க்கும் சென்று வந்துள்ளார். இதனால் இவரை பிடிப்பது போலீசாருக்கு சவாலாக இருந்துள்ளது.

பிடிப்பட்டது எப்படி?

மன்மதன் சமலை பிடிக்க பெண் போலீசார் ஒருவர் மேட்ரிமோனி தளத்தில் வரன் தேடுவது போல நடித்துள்ளார். பின் சமலுடன் 3 மாதங்களாக பேசி வந்துள்ளார். இருவருக்கிடையில் நட்பு ஏற்பட்டவுடன், சமல் பெண் போலீசாரை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளான். அந்த பெண் போலீசும் அவனுடைய முகவரியை வாங்கியுள்ளார். பின் அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அவரின் போனில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்களுடன் பேசிய வீடியோக்கள், வாட்சப் சாட்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அவனிடமிருந்து ரூ.2 லட்சம் பணம், நான்கு சக்கர வாகனம், புல்லட் பைக், 3 மொபைல் போன்கள், இரண்டு திருமண சான்றிதழ்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ரூ.1.75 லட்சத்துடன் அவனின் வங்கி கணக்கையும் போலீசார் முடக்கியுள்ளனர்.

Tags :
ArrestBhubaneswar PoliceCrimeodisha
Advertisement
Next Article