கோவையில் நடைபெற்ற “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” கருத்தரங்கு!
கோவையில் காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” கருத்தரங்கில் விவசாயிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப்பயிற்சி மற்றும் கருத்தரங்கம் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் இன்று ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடைபெற்றது. கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
குறிப்பாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்த மண்டல கருத்தரங்கில் பல அடுக்கு பல பயிர் சாகுபடி மற்றும் நேரடி சந்தைப்படுத்துதல் தொடர்பாக டாக்டர் மாணிக்கராஜ் மற்றும் வள்ளுவன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளிடம் பேசினர். அதே போன்று மரப்பயர் விவசாயமும் மண்வள மேம்படும் என்ற பொருளில் தமிழ்நாடு வேளாண் கல்லூரி பேராசிரியர் சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.