CSKvsSRH | டாஸ் வென்ற ஹைதராபாத் - சென்னை அணி பேட்டிங்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், தோனி தலைமையிலான சென்னை அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும் இன்று(ஏப்.25) மோதவுள்ளது. இரு அணிகளும் 8 போட்டிகளில் பங்கேற்று 2ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணியில், ஆயுஷ் மத்ரே, ஷேக் ரஷீத், சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் பிரெவிஸ், சிவம் துபே, தீபக் ஹூடா, எம்.எஸ். தோனி, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா ஆகியோர் விளையாட உள்ளனர்.
ஹைதராபாத் அணியில்,அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், ஜீஷான் அன்சாரி, முகமது ஷமி ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.