CSKvsRR | டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி இன்று(மார்ச்.30) மூன்றாவது போட்டியை விளையாடவுள்ளது. இதில் சென்னை அணியை ராஜஸ்தான் அணி எதிர்கொள்கிறது. அசாம் மாநிலத்தில் உள்ள பர்சபரா மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இப்போட்டிக்கான டாஸை வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக்(கேப்டன்), துருவ் ஜூரெல்(விக்கெட் கீப்பர்) , ஷிம்ரான் ஹெட்மியர், ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா ஆகியோர் விளையாட உள்ளனர்.
சென்னை அணியில், ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), விஜய் சங்கர், ஜேமி ஒவர்டன், ரவீந்திர ஜடேஜா, தோனி(விக்கெட் கீப்பர்) , ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா ஆகியோர் விளையாட உள்ளனர். நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணி 2 போட்டிகளில் விளையாடு 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் 2 போட்டிகளில் தோற்றுள்ளது.