CSKvsRR | ராஜஸ்தான் அணிக்கு 188 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 62வது போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று(மே.20) நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய சென்னை அணி சார்பில், தொடக்க வீரர்களாக ஆயுஷ் மத்ரே மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இதில் கான்வே 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருக்கடுத்து வந்த உர்வில் படேல் டக் அவுட்டானார்.
தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னதாகவே களமிறக்கப்பட்டார். இருப்பினும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் 13 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதனிடையே நிதானமாக ஆடி வந்த ஆயுஷ் மத்ரேவும் 43 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் வந்த ஜடேஜா 1 ரன்கள் எடுத்து அவுட்டானர்.
இதையடுத்து டெவால்ட் பிரெவிஸ் தனது பங்கிற்கு சின்னதாக ஒரு கேமியோ ஆடி 42 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதே போல் சிவம் துபேவும் தனது பங்களிப்பாக 39 அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி 16 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் யுத்வீர் சிங் மற்றும் ஆகாஷ் மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். தொடர்ந்து 188 ரன்களை ராகஸ்தான் அணி சேஸிங் செய்ய உள்ளது.