#CSKvsRCB - ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற போவது சென்னையா? பெங்களூரா?
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன.
இந்தியாவில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐபிஎல் 2024 கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. ப்ளே ஆஃபில் மூன்று அணிகள் இடம்பிடித்து விட்டன.
இந்நிலையில் சென்னை அணியா அல்லது பெங்களூரு அணியா என போட்டி தற்போது மாறியுள்ளது. ஏனெனில் இந்த இரண்டு அணிகளே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்புகளை கொண்டுள்ளன. இதில் சென்னை அணி வெல்லுமா அல்லது பெங்களூரு வெல்லுமா? என பெரும் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது ரசிகர்களிடையே.
ஏனெனில் கோலி ஒரு முறை கூட கப் அடிக்கவில்லையே என்ற சோகம் ஒருபக்கம். இதுதான் தோனியின் கடைசி சீசன் என்பது மற்றொரு பக்கம். இவ்வாறு விவாதம் ஒருபக்கம் சென்று கொண்டிருந்தாலும், பெங்களூரு அணியின் ரசிகர்களே சென்னை அணி வெல்ல வேண்டும் என விரும்புகின்றனர். ஏனெனில் இது தோனியின் கடைசி சீசன் என்பதால். போட்டியில் சென்னை வெல்லுமா? வெல்லாதா என்பதைவிட தோனியின் கடைசி சீசன் என்பதே ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த ஐந்து போட்டிகளில் பெங்களூரு அணி தொடர் வெற்றியை பதிவு செய்து வந்துள்ளது. இதனால் பெங்களூரு அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று 68வது லீக் போட்டியில் பெங்களூரு அணியும்,சென்னை அணியும் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் மோதுகின்றன.இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இன்று பெங்களூருக்கு மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி தடைப்பட்டாலும் சென்னை அணி முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சொந்த மைதானத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றாலும், அந்த வெற்றியானது 18.1 ஓவர்களுக்கும், 18 ரன்கள் வித்தியாசத்தில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதை பொறுந்திருந்து பார்ப்போம்.