CSKvsRCB | சென்னை அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, சால்ட் ஆகியோர் களம் கண்டனர். இதில் அதிரடியாக ஆடிய சால்ட் 32 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடயே நிதானமாக ஆடிய விராட் கோலி 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
அவருக்கடுத்து களமிறங்கிய கேப்டன் ரஜத் படிதார் அபாரமாக ஆடி அரைசதம் கடந்து அசத்தினார். அதன் பின்பு அடுத்தடுத்து வந்த லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக வந்த டிம் டேவிட் 22 ரன்கள் அடித்தார். 20 ஓவர் முடிவுகளில் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. இதையடுத்து 197 என்ற இலக்கை சென்னை அணி சேஸிங் செய்யவுள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக நூர் 3 விக்கெட்டுகளையும் பதிரானா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.